Kerja-kerja pemasangan cerucuk dilakukan untuk pembinaan tapak Jejambat di Bandar Saujana Putra, Kuala Langat pada 3 Mac 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

பண்டார் சவுஜானா புத்ரா மேம்பாலம் 2021 செப்டம்பரில் முற்றுபெறும்

கோல லங்காட், மார்ச் 3-

பண்டார் சவுஜானா புத்ராவின் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் மேம்பால கட்டுமானப் பணி 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பண்டார் சவுஜானா புத்ரா வட்டச் சாலையைக் கடக்காமல் மத்திய வடக்கு தெற்கு நெடுஞ்சாலையையும் ( இலைட்) தென் கிள்ளான் நெடுஞ்சாலையையும் (எஸ்கேவிஇ) எட்டு வழிச் சாலைகள் கொண்ட 800 மீட்டர் தூரத்திலான இம்மேம்பாலம் இணைக்கும்” என்று சிலாங்கூர் பெர்மோடாலான் பெர்ஹாட் திட்டமிடல் அதிகாரி யோஸ்மான் யாக்கூப் கூறினார்.

பண்டார் சவுஜானா புத்ரா சுற்றுப் பகுதிகளை இணைக்கும் அங்குள்ள எட்டடுக்கு டோல் சாவடி சந்திப்பானது கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வமாத் திறக்கப்பட்டது என்றார் அவர்.
எனினும், சம்பந்தப்பட்ட மேம்பால பணிகள் போக்குவரத்திற்கும் மக்களுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவற்றைப் பார்வையிட்ட பின்னர் அவர் சொன்னார்.


Pengarang :