NATIONALRENCANA PILIHAN

பெண்களே அன்பான குடும்ப அமைப்பின் முதுகெலும்பு!

கோலாலம்பூர், மார்ச் 9:

அன்பான குடும்ப அமைப்பு உருவாக்கத்தின்ற்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் முதுகெலும்பாக இருப்பவர்கள் மகளிர் ஆகும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமது ஜுகி அலி கூறினார்.
அரசியல் தொடங்கி பொருளாதாரத் துறை வரை, நிர்வாக, கல்வி மற்றும் விளையாட்டு என அனைத்து துறைகளிலும் முடிவெடுக்கும் பொறுப்பு வகித்து வரும் மகளிருக்கு உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அனைவருக்கு சமம் என்று ஹேஷ்டேக் குறியிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் மலேசிய தகவல் மற்றும் பல்லூடகத் துணை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ சூரியானி அகமது.
பெண் என்பவர் கணவர், குழந்தை,நண்பர், உற்றார்,உறவினவர் என அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஓர் அங்கமாகத் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு துறை முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா.

அதே வேளையில், “அனைவரும் சமம்” என்ற இவ்வாண்டு கருப் பொருளை நினைவு கூர்ந்த முன்னாள் துணைப் பிரதமருமான வான் அஜீசா, இனி மகளிர் எவரும் பாகுபாட்டு நடவடிக்கைக்கு பலியாகக் கூடாது என்றார். ஒவ்வோர் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மகளிர் தினத்தின் இவ்வாண்டுக்கான கருப்பொருள் அமைவரும் சமம் ஆகும்.


Pengarang :