雪州水利灌溉局局长拿督卡峇阿山。
SELANGOR

சிலாங்கூர் ஜேபிஎஸ்: இவ்வாண்டு 101 திட்டங்கள் பூர்த்தியாகும்

ஷா ஆலாம், மார்ச் 10:

இவ்வாண்டு பிப்ரவரி வரை 11 ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர் பாசன துறை 70 திட்டங்களில் 39 மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தியுள்ளன. எஞ்சியவை இவ்வாண்டு இறுதிவாக்கில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 101 மேம்பாட்டு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இவற்றில் 31 திட்டங்கள் கட்டுமான திட்டங்கள் அல்ல என்று சிலாங்கூர் வடிகால் மற்றும் நீர் பாசன துறை இயக்குநர் டத்தோ காபார் அசான் கூறினார்.

“ கிள்ளானில் 15 திட்டங்கள், பெட்டாலிங்கில் 5, சிப்பாங்கில் 5, உலு லங்காட்டில் 4, கோம்பாக்கில் 3, கோல லங்காட்டில் 2, சபாக் பெர்ணம் 1, கோல சிலாங்கூரில் 1 என மேம்பாட்டு திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன” என்று ஜூப்ளி பேராக் மண்டபத்தில் சிலாங்கூர் அரசாங்க ஊழியர்களின் கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

மாநில ஜேபிஎஸ் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 272.2 லட்சம் வெள்ளி, வடிகாலின் தரத்தை மேம்படுத்த 95.3 லட்சம் வெள்ளி, ஆற்றுப் படுகை மேம்பாட்டிற்காக 45 லட்சம் வெள்ளி மற்றும்  இதர செலவினங்களுக்காக 100 மில்லியன் வெள்ளி என 527 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் விவரித்தார். 12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை மற்றும் வடிகாலின் தரத்தை மேம்படுத்த மாநிலம் முழுமையும் முக்கிய ஆறு திட்டங்களை உள்ளடக்கி 1.7 பில்லியன் வெள்ளி மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களுக்கு இத்துறை விண்ணப்பம் செய்ய திட்டமிட்டிருப்பதாக காபார் குறிப்பிட்டார்


Pengarang :