Pegawai Kesihatan MPKL menampal notis penutupan sebuah premis makanan di Taman Jaya Utama, Telok Panglima Garang ketika pemeriksaan pada 10 Mac 2020. Foto ihsan Facebook MPKL
PBTSELANGOR

தடுப்பூசி போடாத உணவக ஊழியர்கள்” கடையை 2 வாரங்களுக்கு மூட எம்பிகேஎல் உத்தரவு

பந்திங், மார்ச் 14:

இங்குள்ள தெலுக் பங்ளிமா, தாமான் ஜெயா உத்தாமாவில் ஓர் உணவகத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட ச்ப்ப்தனை நடவடிக்கையின் போது, அங்கு கரப்பான் பூச்சிகள் மற்றும் எலி மலங்கள் இருக்க கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கடை இரு வாரங்களுக்கு மூடப்படும்படி உத்தரவிடப்பட்டது.

அச்சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட உணவக ஊழியர்கள் அனைவரும் உணவகம் நடத்துவதற்கு முன்னர் போட வேண்டுய தைப்பாய்ட் ஊசிகளைப் போடவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கோல லங்காட் நகராண்மைக் கழக (எம்பிகேஎல்) தலைவர் முகமது ஜெயின் அப்துல் ஹமிட் கூறினார்.

சமையல் உபகரணப் பொருள்கள் வைக்கும் பகுதியில் மூன்று கரப்பான் பூச்சிகள் ஊர்ந்து சென்றதையும் எலி மலங்களைக் கண்டதைத் தொடர்ந்து அக்கடையை மூட உத்தரவிட்டதாக அவர் சொன்னார்.
உணவுகள் பரிமாறப்படும் பகுதிகளில் வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டி நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை எம்பிகேஎல் தொடர்ந்து கண்காணிக்கும் என்றார் அவர்.


Pengarang :