Dato’ Seri Amirudin Shari berucap pada sidang Dewan Negeri Selangor di Bangunan Annex, Shah Alam pada 17 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
NATIONALSELANGOR

வருகையாளர்களைக் கவரும் கம்போங் கெமன்சாவின் அடிப்படை வசதிகளின் தரம் உயர்த்த சிலாங்கூர் தயார்!

ஷா ஆலம், மார்ச் 17-

அதிக வருகையாளர்களை ஈர்க்கும் வகையில், உலு கிள்ளான், கம்போங் கெமென்சாவின் அடிப்படை வசதிகளின் தரத்தை உயர்த்த சிலாங்கூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
எனினும், இதே அளவிளான சிறப்பு கவனத்தை கோரும் அதிக எண்ணீKகையிலான சுற்றுலா தலங்கள் இங்கு நிறைய இருப்பதால், சம்பந்தப்பட்ட பகுதியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இத்தகைய மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

மாநிலத்தின் மொத்த வரி வசூல் தொகையில் 50 விழுக்காடு சுற்றுலா துறை மூலம் கிடைப்பதால், இத்தகைய நிதி ஒதுக்கீடு அவசியம் ஆகும். 29=018ஆம் ஆண்டில் வசூலிக்கப்ப்பட்ட மொத்த வரி தொகையான 20 மில்லியன் ரிங்கிட்டில் 10 மில்லியன் ரிங்கிட் சுற்றுலா துறையின் வழி கிடைக்கப்பெற்றவையாகும் என்றார் அவர்.
சுற்றுலா தலங்களின் அடிப்படை வசதிகளின் தரத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட நிதி சுற்றுலா துறை செயற்குழுவிடம் ஒப்படைக்கப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :