RENCANA PILIHANSELANGOR

குடி நீர் விநியோகம் சீரடைவதற்காக விடிய விடிய பணியாற்றியவர்களுக்கு பாராட்டு!

ஷா ஆலம், மார்ச் 18-

நான்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் ஏற்பட்ட துற்நாற்றத்தை அகற்றும் நடவடிக்கையில் அல்லும் பகலும் அயராது ஈடுபட்ட பணியாளர்களை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வெகுவாகப் பாராட்டினார்.
பயனீட்டாளர்களுக்கு தடை பட்டு போன நீர் விநியோகம் மீண்டும் கிடைப்பதற்காக சம்பந்தப்பட்ட பணியாளர்கள் விடிய விடிய பணியில் ஈடுபட்டு மாநில மக்களுக்கான தங்கள் கடப்பாட்டை நிறைவேற்றியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

துற்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து சுத்திகரிப்பு வேலை நிறுத்தப்பட்ட கோல சிலாங்கூரில் உள்ள 2 கட்ட ஆலைகளில் நடைபெற்ற சீர்மைப்பு பணியை நேற்றிரவு அவர் பார்வையிட்டார். இதனிடையே, கோல சிலாங்கூர் நீர் இன்று காலை வழக்க நிலைக்கு திரும்பியது என்றும் கிள்ளானில் இன்று மாலை 6 மணியளவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :