NATIONALRENCANA PILIHANSELANGOR

வர்த்தகர்களுக்கு தலா ரிம 500 மற்றும் ஒரு மாத வாடகை விலக்கு!

ஷா ஆலம், மார்ச் 20-

கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தைச் சேர்ந்த மொத்தம் 80,000 அங்காடி கடைகாரகள் மற்றும் வர்த்தகர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக ரிம 500 வழங்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட அங்காடி மற்றும் வர்த்தக கடைகளுக்கு ஒரு மாத வாடகை விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

“இந்த உதவித் தொகையைப் பெற ஏப்ரல் மாதம் விண்ணப்பிக்கலாம். நடப்பில் உள்ள நடமாட்ட கட்டுப்பாடு முடிவுற்றதும் இந்த உதவித் தொகை விநியோகிக்கப்படும்” என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்டுள்ள வர்த்தககளின் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வழங்கப்படும் இந்த உதவித் திட்டத்திற்காக 52 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

இதனிடையே, ஹிஜ்ரா உதவித் திட்டத்தில் பங்கெடுத்துள்ள 40,000 தொழில்முனைவர்களுக்கு மாதாந்திர தவணைக் கட்டணம் செலுத்தும் நடவடிக்கை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.
மேலும், விவேக வாடகை திட்டத்தில் பங்கேற்றுள்ள 2,700 பேர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கான வாடகை கட்டணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :