Pembantu perubatan memeriksa suhu badan orang awam sebelum mendapatkan rawatan di Klinik Damai, Seksyen 7, Shah Alam pada 27 Mac 2020 sebagai langkah mencegah penularan Covid-19. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONAL

43,462 பேர் மீது கோவிட்-19 பரிசோதனை 32,894 பேர்களுக்கு தொற்று இல்லை

ஷா ஆலம், ஏப்.2-

இதுவரை மொத்தம் 43,462 தனிநபர்கள் மீது கோவிட்-19 தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவர்களில் 32,894 பேருக்கு இத்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள வேளையில், 2,908 பேர் அல்லது 6.7 விழுக்காட்டினருக்கு அத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டூவிட்டர் வழி அமைச்சு தகவல் பகிர்ந்தது.

இந்த எண்ணிக்கையில், 702 பேர் கண்காணிக்கப்படும் வேளையில் 635 பேர் தப்லே குழுவினரோடு ( 1ம்379) நெருங்கிப் பழகியதால் நோய் கண்டவர்கள்.
இவ்வேளையில், இன்னும் 7,660 பேர் பரிசோதனையின் முடிவிற்காக காத்திருக்கின்றனர்.
இதுவரை சிகிச்சையளிக்கப்படு வந்தவர்களில் மொத்தம் 645 பேர் அல்லது 22.2 விழுகாட்டினர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்று கூறினார்.


Pengarang :