Dato’ Seri Amirudin Shari menjawab pertanyaan media selepas selesai Majlis Penyerahan Sumbangan dan Pelepasan Konvoi Khidmat Bantuan Belia Siswa GPMS Selangor di Bangunan SUK Selangor, Shah Alam pada 8 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-19 சவால்: நாம் விவேக நகரை நோக்கி பயணிக்க சரியான தருணம் – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஏப்ரல் 9:

கோவிட்-19 சவாலை நாம் அனைவரும் எதிர் நோக்கி வரும் வேளையில் மறைமுகமாக சிலாங்கூர் வாழ் மக்கள் விவேக நகர் நிலையை அடைய தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். தற்போது ஒவ்வொருவரும் தாங்கள் தயாராக இருக்கிறார்களா அல்லது இந்த புதிய சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் விவரித்தார்.

” தற்போது புதிய பரிமாணங்கள் தோன்றியுள்ள நிலையில் இ-பஸார் போன்ற புதிய வாய்ப்புகளை மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் அதிகமாக கூடக் கூடாது என்ற எண்ணத்தில் மாநில அரசாங்கம் ரமலான் சந்தையை ரத்து செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் நேர்மறையான பார்வையில் செயல்பட வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும்,” என்று டிவி3 மலேசிய ஹாரி இனி நிகழ்ச்சியில் பேசிய போது இவ்வாறு அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


Pengarang :