pengarah kanan Pendidikan Yayasan Selangor, Zahura Zakry
SELANGOR

ஆறாம் ஆண்டு மாணவர்கள் மின்னியல் கற்றல் முறைக்குப் பதிவு

ஷா ஆலாம், ஏப். 15-

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையொட்டி (பிகேபி) இம்மாநிலத்தைச் சேர்ந்த 51,870 மாணவர்கள் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டிலான மின்னியல் கற்றல் முறைக்குத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர். இத்திட்டத்தில் 32.28 விழுக்காடு என ஆரம்பப்பள்ளி மதிப்பீட்டு தேர்வு (யூபிஎஸ்ஆர்) எழுதவிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களே அதிக எண்ணிக்கையில் பதிந்து கொண்டிருப்பதாக சிலாங்கூர் கல்வி அறநிறுவன உயர்நிலை இயக்குனர் ஜாவுரா ஜாக்ரி தெரிவித்தார்.

“22.71 மூன்றாம் படிவ மாணவர்களும் எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் 15.55 விழுக்காடு ஐந்தாம் படிவ மாணவர்களும் இத்திட்டத்தில் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்” என்று சிலாங்கூர் கினியிடம் விவரித்தார். மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று தொடங்கப்பட்ட வேளையில் சிலாங்கூர் டியூட்டர். காம் அகப்பக்கத்தில் 100,000 மாணவர்கள் பதிந்து கொள்வர் என்று தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக ஜாவுரா மேலும் சொன்னார்.


Pengarang :