NATIONALRENCANA PILIHANSELANGOR

சில மணி நேரங்களுக்குப் பின்னர் 4 நீர் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயல்படுகின்றன!

ஷா ஆலம், ஏப்.17-

துர்நாற்ற பரவலைத் தொடர்ந்து சுங்கை சிலாங்கூரில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 4 தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இன்று காலை 4.40 மணிக்கும் 6.30 மணிக்கும் இடையில் மீண்டும் செயல்படத் தொடங்கின.
சுங்கை சிலாங்கூரின் நீரோட்டத்தை அதிகரிக்க பெஸ்தாரி ஜெயாவில் உள்ள மாற்றும் நீர் தேக்கத்தில் இருந்து 807 மில்லியன் லிட்டர் தண்ணீரை சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) உடனடியாக செயல்படுத்தியதன் பயனாக அங்கு நிலைமை சீரடைந்தது என்று ஓர் அறிக்கை வாயிலாக லுவாஸ் தெரிவித்தது.

அதே வேளையில், பெஸ்தாரி ஜெயா பாராஜ் 5 கதவு திறக்கப்பட்டதால் சுங்கை சிலாங்கூரில் நீரோட்டம் விரைவுபடுத்தப்பட்டு அந்நிலையங்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள முடிந்தது என்று அது கூறியது.
துற்நாற்றம் ஏற்பட்டதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் மீண்டும் அச்சம்பவம் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இது அவசியமாகும் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது.


Pengarang :