Pasukan Prtugas Kesihatan Selcare menjalankan Saringan Komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

தெளிவான முகவரி இல்லாதது ரந்தாவ் பாஞ்சாங்கில் சுகாதார பரிசோதனைக்கு இடையூறை ஏற்படுத்தியது

ஷா ஆலாம், ஏப்.20-

தெளிவான முகவரி இல்லாதது மற்றும் வரிசையின்றி காணப்பட்ட வீடுகள் இங்குள்ள ரந்தாவ் பாஞ்சாங்கில் சமூக பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்ததாகக் கூறப்பட்டது.
தற்போதைய உஷ்ணமான சூழுலில் சுய பாதுகாப்பு சாதனம் (பிபிஇ) உட்பட மூன்று அடுக்கு ஆடைகளை அணிவதில் அவர்களின் உற்சாகம் பாதிக்கப்படவில்லை.

தனித்தனி நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் இந்த கிராமத்தில் வீடுகளை அடையாளம் காண்பதில் தாங்கள் பிரச்னையை எதிர்நோக்கியதாகவும் இதுவே பரிசோதனை நடவடிக்கையைத் தாமதமாக்கியதாகவும் டாக்டர் மெகாட் அகமது நுப்லி சொன்னார்.
“கோவிட் -19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கொண்ட கடப்பாடு மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு காரணமாக சமூக பரிசோதனை நடவடிக்கையை நாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டோம்” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.


Pengarang :