Ketua Pengarah Kesihatan, Datuk Dr Noor Hisham Abdullah
NATIONALRENCANA PILIHAN

உயர்கல்வி மாணவர்கள் வீடு திரும்பலாம் – இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஏப்ரல் 21:

மலேசிய பொது பல்கலைக் கழகத்தில் தங்கி உள்ள மாணவர்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்க பெற்றோரின் வேண்டுதல்களை பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. மூத்த பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப், எந்த பல்கலைக் கழகத்திலும்  கோவிட்-19 கிளஸ்டர்கள் இல்லை என்று சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது என்றார்.

மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் முடிவு ஏற்பட்டால், குறிப்பிட்ட இயக்க நடைமுறைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பொது மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களை நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது, தங்களின் வீட்டிற்கு திரும்ப அனுமதி இல்லை என்று அரசாங்கம் முடிவு செய்ததாக இஸ்மாயில் ஏப்ரல் 13ம் தேதி அறிவித்தார். அங்கு தங்கியிருக்கும் காலத்திற்கு அவர்களின் உணவு மற்றும் பிற வசதிகள் அரசாங்கத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.


Pengarang :