Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari (dua, kanan) bersama Pengarah PPAS, Mastura Muhamad (kanan) menyertai Jom Baca Untuk 10 Minit ketika Majlis Perasmian Pesta Buku Selangor 2020 di Shah Alam Convention Centre, Shah Alam pada 1 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்வீர்! – அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஏப்.23-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை கால கட்டத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க இலட்சியவாதி ஒருவரின் போராட்டங்களைச் சித்தரிக்கும் ‘மாஸ்’ எனும் நாவலை வாசிப்பதை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தேர்வு செய்துள்ளார்.
பிரபல பிலிப்பைன்ஸ் நாவலாசிரியரான எஃப். சியோனில் ஜோஸ் எழுதியுள்ள இந்த நாவலில் மக்கள் சந்திக்கும் போராட்டங்கள், சவால்கள், குழப்பங்கள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் முகநூலில் அமிருடினின் அபிமான நாவல்கள் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு பதிவிட்டார்.
இலட்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதோடு அக்கொள்கையில் உறுதியாக இருப்பதையும் இந்நாவல் உணர்ச்சி பூர்வமாக சித்தரிக்கிறது என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் இன்று அனுசரிக்கப்படும் உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி தொடர்பில் ஜோம் வாசிப்போம் இன்று இயக்கம் தொடங்கியது.


Pengarang :