Masdiana Muhamad bersama salah seorang anaknya meng
SELANGOR

பிகேபி காலத்தில் குடும்பத்துடன் கூடி இருப்பது ஒரு பாக்கியம்! – மந்திரி பெசார் துணைவியார்

ஷா ஆலம், ஏப்.23-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலல் கட்டத்தில் குடும்பத்துடன் கூடி இருப்பது ஒரு பாக்கியமாகும் என்று மந்திரி பெசாரின் மனைவி டத்தின்ஸ்ரீ மாஸ்டியானா முகமது கூறினார். ஒரு குடும்ப மாதுவான தாம் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆறு குழந்தைகளின் தேவைகளை தாம் வழக்கம்போல் நிறைவேற்று வருவதாக அவர் சொன்னார்.

குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளை நேரடியாக கண்ணுற்று வருவதை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். நான் வழக்கம்போல் உடற்பயிற்சியோடு தினச்ரி பல்வேறு உணவுகளை சமைத்து மகிழ்கிறேன் என்றார் அவர்.
ஒரு நாள் ரொட்டி சானாயும் கறியும் சமைத்தேன். அவை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றாலும், அனைத்தும் தீர்ந்து போயின என்று சிலாங்கூர் டாருல் ஏசான் கழகத்துடனான இணையம் வாயிலான நேர் காணல் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.


Pengarang :