Anggota tentera mengawal pergerakan masuk dan keluar di bangunan Selangor Mansion berikutan kes Covid-19 di bangunan berkenaan pada 7 April 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

கோவிட்-18 தொற்று சீரடைந்து வருகிறது பிகேபியைத் தொடர்ந்து கடைப்பிடிப்போர்! – டாக்டர் சுல்கிப்ளி

ஷா ஆலம், ஏப்.24-

நாட்டில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பதை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-1இ தடுப்பு பணியாளர் குழுவின் (எஸ்டிஎஃப்சி) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமது கூறினார்.
சிலாங்கூரில் ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் ஒரு முக்கிம் மட்டுமே இன்னும் சிவப்பு மண்டலமாக இருப்பதே இதை உறுதி செய்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே, காஜாங்கில் தொற்று சம்பவங்கள் குறைந்து தற்போது மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார். எனவே, பொது மக்கள் தொடர்ந்து கட்டொழுங்குடன் பிகேபி ஆணையை[ பின் பற்ற வேண்டும். ஏனெனில் நமது போராட்டம் இன்னும் முற்று பெறவில்லை என்றார் அவர்.
நமது குடியிருப்பு பகுதிகள் கோவிட்-19 தொற்றில் இருந்து முழுமையாக விடுபட்டு இருப்பதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று டாக்டர் சுல்கிப்ளி வேண்டுகோள் விடுத்தார்.


Pengarang :