NATIONAL

சிங்கப்பூரில் இருந்து திரும்பும் மலேசியர்களுக்கு புதிய நடைமுறைகள் !!!

ஜோகூர் பாரு, ஏப்ரல் 25:

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிப்­ப­தைத் தொடர்ந்து இனி­மேல் அங்­கி­ருந்து மலே­சியா திரும்­புப­வர்­க­ள் தங்களது வீட்டில் சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள அனு­ம­திக்­கப்­படமாட்­டார்­கள் என அறி­விக்­கப்­பட்டு உள்­ளது. சிங்­கப்­பூ­ரிலிருந்து நாடு திரும்­பும் மலே­சி­யர்­கள் தொடர்­பில் புதிய நடை­முறை வகுக்­கப்­பட்டு உள்­ள­தாக ஜோகூர் மாநில சுகா­தார மற்றும் சுற்­றுச்­சூ­ழல் ஆட்சிக்குழு உறுப்பினர்  ஆர்.வித்­யா­னந்­தன் நேற்று ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

“சிங்­கப்­பூ­ரில் நடத்­தப்­படும் கொவிட்-19 பரி­சோ­த­னை­கள் இனி பொருந்­தாது. கிரு­மித்­தொற்று இல்லை என பரி­சோ­தனை மூலம் அறி­விக்­கப்­பட்­ட­வர்­கள் அவ­ர­வர் வீடு­களில் தனி­மைப்­ப­டுத்த மேற்­கொள்­ளப்­பட்டு வந்த நடை­முறை இனி கிடை­யாது. நாடு திரும்­பும் குடி­ம­க்கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வருகை அனு­மதி அட்டை உள்­ளோர் அனை­வ­ரும் ஜோகூ­ருக்­குள் நுழைந்­த­தும் உடல்­வெப்­பப் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும். காய்ச்­சல் கண்­டி­ரா­தோர், உடல்­ ந­லப் பிரச்­சினை தொடர்­பி­லான கண்கா­ணிப்பு மற்­றும் விசா­ர­ணைக்கு உட்­ப­டா­தோர் என அனை ­வ­ரும் மருத்­து­வப் பரி­சோ­த­னையை இங்கு மேற்­கொள்ள வேண்­டும்.

“மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் கண்­ட­றி­யப்­ப­டு­வோர் மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். பிரச்­சினை ஏதும் இல்­லா­தோர் மலே­சிய அர­சாங்­கத்­தால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட தனி­மைப்­ப­டுத்­தும் மையங்­ க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர். இவர்­கள் தவிர, நாட்­டுக்­குள் நுழை­யும்­போதே காய்ச்­ச­லு­டன் வரு­வோர் நேராக மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வர்,” என்று திரு வித்­யா­னந்­தன் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்டுள்­ளார்.


Pengarang :