Petugas kesihatan menunjukkan sampel ujian Covid-19 yang dibuat melalui kaedah pandu lalu di Dewan Raja Muda Musa, Seksyen 7 pada 20 April lalu. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து புதிய சம்பவங்களை மிஞ்சியது !!!

புத்ராஜெயா, ஏப்ரல் 27:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5,820 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 40 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று ஒரு  மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 99-ஆக உயர்வு கண்டுள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 37 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 17 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 95 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,957 ஆக உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 67.9 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் பெருமிதம் கொண்டார்.


Pengarang :