SELANGOR

எண்ணெய் கசிவு மீது உடனடி நடவடிக்கை; தண்ணீர் விநியோகத் தடை தவிர்க்கப்பட்டது!

ஷா ஆலம், ஏப்.28-
பெஸ்தாரி ஜெயா பகுதியில் உள்ள கேஎல்- லாருட் குளத்தில் ஏற்பட்ட தூய்மைக்கேட்டு சம்பவத்தின் மீது உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அங்குள்ள பயனீட்டாளர்களுக்கு தண்ணீர் நீர் விநியோகம் தடைபடவில்லை என்று சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) கூறியது.
அப்பகுதியில் செயல்பட்டுக் கொண்டு இரும்பு தொழிற்சாலையின் அருகே நீர் வள சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட போது நேற்று காலை 11.20 மணியாளவில் அங்கு எண்ணெய் கசிவு இருந்ததை ஆயர் சிலாங்கூர் கண்ணுற்றது என்று லுவாஸ் தெரிவித்தது.
உடனடியாக தண்ணீர் வள அவசர குறியீடான மஞ்சள் செயல்படுத்தப்பட்டது. அங்குள்ள உள்ள ஒரு ஹைடிராலிக் எண்ணெய் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதிலும் சோதனை நடத்தப்பட்டது .
எனினும், கடந்த மார்ச் 18ஆம் தேதி நடமாட்ட கட்டுப்பாடு ஆணை பிறப்பிக்கப்பட்டது முதல் அத்தொழிற்சாலை அதன் நடவடிக்கைகளை நிறுத்தி விட்டது என்று அச்சோதனையில் கண்டறியப்பட்டது.
தொழிற்சாலை பகுதியில் உள்ள பழைய எண்ணெய் பீப்பாய்களில் இருந்து எண்ணெய் கசிந்த்துள்ளது அப்போது கண்டறியப்பட்டவுடன் இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் உடனடியாக சம்பந்தப்பட்ட எண்ணெயை உறிஞ்சு எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக லுவாஸ் தெரிவித்தது.

கசிவு மீது உடனடி நடவடிக்கை
தண்ணீர் விந்யோகத் தடை தவ்ர்க்கப்பட்டது!

Pengarang :