GERIK, 28 April — Timbalan Menteri Kesihatan Datuk Dr Noor Azmi Ghazali (kanan) dan Pengerusi Jawatankuasa Pendidikan, Pembangunan Modal Insan, NGO dan Masyarakat Sivil Perak Razman Zakaria dihadapkan ke Mahkamah Majistret di sini hari ini bagi menghadapi pertuduhan melanggar Perintah Kawalan Pergerakan (PKP) dua minggu lalu. Mereka masing-masing dijatuhi hukuman denda maksimum RM1,000 atau penjara sebulan oleh mahkamah selepas mengaku bersalah terhadap pertuduhan masing-masing yang dibacakan secara serentak oleh jurubahasa mahkamah. Mereka membayar denda itu. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிகேபி மீறிய துணை அமைச்சர், எக்சோ ஆகிய இருவருக்கும் தலா ரிம. 1,000 அபராதம்

கிரிக், ஏப்.28-

இரு வாரங்களுக்கு முன்னர் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையை மீறி ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதார துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலிக்கு ரிம. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் பங்கெடுத்த பேரா மாநில மனித மேம்பாட்டு அரசு சாரா அமைப்பின் கல்வு செயற்குழு தகவர் ராஸ்மான் ஜாக்காரிய மற்றும் எஞ்சிய 13 பேருக்கு இதே தண்டனையை மாஜிஸ்திரேட் நோர்ஹாடாயாத்தி முகமது நாஸ்ரோ தனது தீர்ப்பில் அளித்தார்.

2929 தொற்று கட்டுப்படுத்தும் ஆணை சட்டத்தின் 6(1) இன் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளை மீறி டாக்டர் நோர் அஸ்மி, ராஸ்மான் உட்பட 13 பேரும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சமூக இடைவெளி நடைமுறையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.  இக்குற்றத்தை அவர்கள் லெங்கோங், கம்போங் லுவாரில் உள்ள மாஹாட் தாஹ்ஃபிஸ் குர் ஆன் மண்டபத்தில் கடந்த ஏப்ரல்17ஆம் தேதி இரவு 7 மணிக்கு புரிந்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்கள் யாவரும் இக்குற்றத்தை முதல் தடவையாக புரிந்துள்ளதாலும் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவுப் பொருகள் வழங்குவதற்கு அஸார் தொழுகையில் பங்கெடுக்க கூடிய காரணத்தால் இந்த அபராதம் போதுமான தண்டனையானது நோர்ஹிடாயாத்தின் தனது தீர்ப்பில் கூறினார்.


Pengarang :