Ahmad Zahiri turun padang dan membantu JKM menyerahkan bantuan makanan kepada penduduk dikenakan Perintah Kawalan Diperketatkan di Selayang Baru. Foto Facebook Ahmad Zahiri.
PBTSELANGOR

பிகேபிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களின் நலன் பேணப்படும்!

ஷா ஆலம், ஏப்.28-

இம்மாதம் ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள (பிகேபிடி) செயலாயாங் பாரு மக்களின் நலன் தொடர்ந்து பேணப்படும் என்று செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் அகமது ஜாஹிரி ஜாஹிட் சோஃபியான் தெரிவித்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு உணவுப் பொருள் கூடைகள் வழங்கப்படும் வேளையில் அங்குள்ள அந்நிய நாட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 வேளைகள் சமைக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன என்றார் அவர்.
இந்த உணவு பங்கீட்டை நண்பகல் 12 மணி, மாலை 5 மணி மற்றும் விடியற் காலை 3 மணிக்கு மலேசிய சமூகநல இலாகா விநியோகிப்பதாக அவர் சொன்னார்.

எனினும், குடிமக்கள், அந்நிய நாட்டவர்கள் என்ற பேதமில்லாமல் அனைவருக்கும் உணவுப் பொருள் கூடைகள் வழங்க வேண்டும் என்று அவர் வ்லியுறுத்தினார்.
“ஏனெனில், ஒவ்வொரு நாளும் 3 வேளையும் முன் வரிசை பணியாளர்கள் உணவுப் பொட்டலங்களை அந்நிய நாட்டவடிகளுக்கு விநியோக்கும் நடவடிக்கையானது சம்பந்தப்பட்ட பணியாளர்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க்கக் கூடும்” என்று அவர் கருத்துரைத்தார்.
இந்த பரிந்துரை ஜேகேஎம்மிடம் மின்மொழியப்பட்டுள்ளது என்றும் அத்தரப்பு அதனை பரிசீலித்து வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :