EXCO pertanian Ir Izham Hashim menyerahkan insentif bantuan pertanian kepada wakil jabatan dan agensi kerajaan negeri di bawah Pakej Rangsangan Selangor Prihatin 2.0 pada 29 April 2020. Foto Facebook
SELANGOR

சிலாங்கூரைச் சேர்ந்த 2,400 விவசாயத் துறையினருக்கு மாநில அரசின் உதவி !!!

ஷா ஆலம், ஏப்.30-

சிலாங்கூர் 2ஆம் கட்ட பரிவுமிக்க உதவித் திட்டத்தின் கீழ் விவசாயத் துறைக்கு ரிம. 1.5 மில்லியன் ஒதுக்கப்பட்டதானது மாநிலத்தின் விவசாய மக்களுக்கு நன்மையளிக்கும் என்று விவசாயத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் கூறினார்.இந்த ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலம் பகிர்ந்தளிக்கப்படும் என்று உதவி பங்கீட்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்த பின்னர் இஷாம் தெரிவித்தார்.

இந்த உதவிகள் விதைகள், உரம், பற்றுச் சீட்டுகள், எரிவாயு , உபகரணங்கள் மற்றும் சமைக்கப்படாத பொருட்கள் வடிவில் வழங்கப்படும் என்றார் அவர்.
இந்த உதவிகள் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், மீன் வளப்பார்கள், மீனவர்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவர்கள் என மொத்தம் 2,400 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :