NATIONALRENCANA PILIHAN

கட்டண ஒத்திவைப்பு முறையை தேர்வு செய்தவர்கள் மீண்டும் மாதத் தவணையை செலுத்தலாம்!

கோலாலம்பூர், மே.1-

ஏப்ரல் 1 தொடங்கி செப்டம்பர் 30 வரை 6 மாதக் காலத்திற்கு மாதாந்திர கட்டணத்தை ஒத்திவைக்கும் தேர்வை தேர்ந்தெடுத்த தவணை முறையில் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்கள் மாதக் கட்டணத்தை தொடர்ந்து செலுத்தும் தேர்வை செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக மலேசிய உள்நாட்டு வங்கிகளின் சங்கம் (ஏபிஎம்) தெரிவித்தது.

“சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள 6 மாத தவணக் கட்டணங்களை அக்டோபர் மாதத் தவணையுடன் சேர்ந்து செலுத்தும் போது அவற்றுக்கு வட்டி ஏதும் விதிக்கப்படாது” என்று ஏபிஎம் அறிக்கை கூறியது.
“..அல்லது, அக்டோபர் மாதம் தொடங்கி வழக்கமான மாதத் தவணையை மட்டும் செலித்தி வந்து சம்பந்தப்பட்ட கொள்முதலுக்கான கடைசி தவணைக் காலம் முடிவுறும் வேளையில் அடுத்த 6 மாதங்களுக்குச் செலுத்தலாம்” என்று அது விவரித்தது.

இந்த தேர்வில், ஒப்பந்த காலம் முடிவுறும் வரை ஒத்திவைக்கப்பட்ட தவணைக் கட்டணங்களுக்கு வட்டி விதிக்கப்படும் என்றும் அது கூறியது.
சம்பந்தப்பட்ட வங்கிகள் அனுப்பிய ஒத்திவைப்பு தேர்வு குறித்த அறிக்கைகளுக்கு பதிலளிக்காத தவணை முறையில் கொள்முதல் செய்த வாடிக்கையாளர்கள் வழங்கப்பட்ட கட்டண ஒத்திவைப்பு தேர்வை ஏற்கவில்லை என்பதாக பொருள் கொள்ளப்படும்.
எனவே, அவர்கள் வழக்கம் போல் தங்கள் மாதத் தவணைக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று அவ்வறிக்கை விளக்கியது.


Pengarang :