Seorang penduduk menerima barangan keperluan harian daripada ahli keluarganya melalui dawai kawad berikutan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di Bandar Baru Selayang pada 29 April 2020. Foto HAFIZ OTHMAN /SELANGORKINI
NATIONAL

பிகேபி நடவடிக்கையில் அமல்படுத்தப்பட்ட10 கிலோ மீட்டர் தூர விதி அகற்றப்பட்டது

புத்ராஜெயா, மே 4:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபி) கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் மட்டுமே செல்ல வேண்டிய விதி இனி நடைமுறையில் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார்.

எவ்வாறாயினும், இன்றுமுதல் நடைமுறையில் உள்ள  பிகேபிபி கீழ், மாநில எல்லை தாண்டிய பயணங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் இஸ்மாயில் சப்ரி, நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தொடங்கப்பட்டது என்றும், இது ஐந்தாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி 5) என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறினார். இதன் அமலாக்கத்துடன், நான்காம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி 4) கீழ் உள்ள விதிமுறைகள் இதோடு ரத்து செய்யப்படுகின்றன எனவும் அறிவித்தார்


Pengarang :