புத்ராஜெயா, மே 5:
நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,383 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 30 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 7 புதிய நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள். இன்று ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.
இன்றைய நிலையில் 24 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 8 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 83 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,567 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 71.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.