PUTRAJAYA, 29 April — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. Sebanyak 94 kes baharu positif COVID-19 dilaporkan setakat tengah hari tadi, sekali gus menjadikan jumlah kumulatif kes yang positif di negara ini sebanyak 5,945 kes manakala yang sembuh sebanyak 55 kes dan tiada kes kematian akibat jangkitan itu direkodkan hari ini dengan jumlah kumulatif kematian kekal 100 kes. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 135 நோயாளிகள் குணமடைந்தனர், 45 புதிய சம்பவங்கள் !!!

புத்ராஜெயா, மே 6:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,428 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 45 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 1 புதிய நோயாளி வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் ஆவார். இன்று ஒரு மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலான மரண எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 22 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 9 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 135 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,702 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 71.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :