KUALA LUMPUR, 5 Mei — Anggota Tentera Malaysia (ATM) memasang kawat duri bagi mengawal laluan keluar masuk di sekitar Chow Kit tengah malam tadi. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19 நோய் அதிகமாக பரவும் பகுதிகளில் பிகேபி தொடர்ந்து அமல்படுத்தப்படும் !!!

புத்ராஜெயா, மே 6:

கோவிட் -19 நோய் சம்பவங்கள் திடீரென அதிகரித்த பகுதிகளில் நடமாடும்  கட்டுப்பாட்டு ஆணையை (பிகேபி) அரசாங்கம் செயல்படுத்தும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் கவனம் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவதாக டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

“திடீர் அதிகரிப்பு ஏற்பட்டால், சவ் கிட்டில் உள்ளதைப் போலவே நாங்கள் பிகேபியை முறையாக நிர்வகிப்போம். தொடர்ந்து நோய் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தால், அந்த பகுதி கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபிடி) செயல்படுத்தப்படலாம். புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிகேபி நிர்வாக ரீதியாக பிகேபிடியை செயல்படுத்துவது உள்ளிட்ட அனைத்து  நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு கோவிட் -19 நோய்த்தொற்றுடன் அந்த பகுதியை அதிகாரிகள் கண்காணிப்பார்கள். பெட்டாலிங் உட்பட நேற்று ஒன்பது முதல் 10 பகுதிகளுக்கு சிவப்பு மண்டல விரிவாக்கத்தைத் தொடர்ந்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். பெட்டாலிங் உள்ளிட்ட எந்தவொரு பகுதியிலும் நோய் சம்பவங்களின் எண்ணிக்கையை  அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார்.


Pengarang :