KUALA LUMPUR, 6 Mei — Anggota Angkatan Tentera Malaysia (ATM) mengawal di sekitar kawasan Bandar Baru Selayang ketika tinjauan fotoBernama hari ini. Bandar Baru Selayang merupakan antara kawasan yang dikuatkuasakan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) bermula 25 April lepas. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கோவிட்-19: 39 புதிய சம்பவங்கள் , 74 நோயாளிகள் குணமடைந்தனர் !!!

புத்ராஜெயா, மே 7:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,467 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 39 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 30 நோயாளிகள் வெளிநாட்டினர் எனவும் 9 உள்நாட்டினர் ஆகும். இன்று எந்த ஒரு மரணமும்  பதிவு செய்யப்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 107-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 18 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 8 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 74 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,776 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 71.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :