Suasana ketika Saringan Komuniti Covid-19 secara pandu lalu hasil inisiatif Kerajaan Negeri bersama Klinik Selcare dan dipantau oleh Pejabat Kesihatan Daerah dilakukan di Seksyen 7, Shah Alam pada 18 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 96 நோயாளிகள் குணமடைந்தனர் , 67 புதிய சம்பவங்கள் – டாக்டர் நூர் ஹிஸாம்

புத்ராஜெயா, மே 10:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 6,656 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 67 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 49 நோயாளிகள் வெளிநாட்டினர் எனவும் 18 உள்நாட்டினர் ஆகும். இன்று எந்த ஒரு மரணமும்  பதிவு செய்யப்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 108-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 18 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 6 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 96 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,025 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 71.55 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :