Paparan skrin LHDN bagi memohon BPN. Foto BERNAMA
NATIONAL

தேசிய பரிவுமிக்க உதவி நிதியின் மேல்முறையீடு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது- பிரதமர்

புத்ராஜெயா, மே 10:

தேசிய பரிவுமிக்க உதவிநிதிக்கு (பிபிஎன்)  தகுதியான ஆனால் இன்னும் கிடைக்கப்பெறாத நபர்கள், மே 31 வரை மேல்முறையீடு செய்யலாம் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட மக்களிடம் இருந்து பல புகார்களைக் தாம் கேட்டதாகப் பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் கூறினார். அவர்களில் சிலர் வேலை இழந்துள்ள போதிலும் பிபிஎன் உதவி பெறத் தவறிவிட்டதாக அவர் கூறினார்.

“ மேற்கண்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு, பிபிஎன் விண்ணப்பங்களுக்கான மேல்முறையீட்டு காலத்தை 2020 மே 31 வரை நீட்டிக்க நிதியமைச்சர் ஒப்புக் கொண்டார். மின்னஞ்சல்களை அனுப்புவது மட்டுமல்லாமல், தங்களின் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படாத விண்ணப்பதாரர்கள் 2020 மே 11 முதல், முறையீடு செய்வதற்காக உள்நாட்டு வருமான வரித்துறை (எல்ச்டிஎன்) முகப்புகளுக்கும் நேரடியாகச் செல்லலாம். அனைத்து முறையீடுகளும் அங்கீகரிக்கப்படும் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் தகுதிவாய்ந்த நியாயமான முறையீடுகள் அங்கீகரிக்கப்படும்” என்று அவர் இன்று டிவி 1-இல் நேரலை நிகழ்ச்சியில் உரையாற்றும் போது இவ்வாறு  கூறினார்.

நேற்று தேசிய பரிவுமிக்க உதவிநிதி  பெறாத மக்களிடையே அதிருப்திகள் சமூக ஊடகங்களில் பரவலாகின. இது குறிப்பாக பணி நிறுத்தப்பட்டவர்கள் அல்லது நிலையான வருமானம் இல்லாதவர்கள் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களை உள்ளடக்கி இருந்தன. முறையீடுகள் உட்பட 2.3 மில்லியன் பிபிஎன் விண்ணப்பங்களுக்கு நேற்று அரசு ஒப்புதல் அளித்தது. முழுமையான தகவல் இல்லாத விண்ணப்பங்களும், வருமான தகுதிகளை மீறிய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்று முஹீடின் யாசீன்  மேலும் தெரிவித்தார்.


Pengarang :