PETALING JAYA, 10 Mei — Petugas Kementerian Kesihatan kelihatan membuat bancian serta mengarahkan setiap penghuni rumah perlu membuat saringan COVID-19 setelah Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKPD) di sekitar kawasan Pasar Jalan Othman hari ini.?Kawasan itu menjadi kawasan terbaharu yang dilaksanakan PKPD berkuatkuasa hari ini.?Lokasi perintah PKPD kelapan ini melibatkan kira-kira 2,900 penghuni kediaman dan premis perniagaan di kawasan berkenaan. ?– fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA?
NATIONALRENCANA PILIHANSELANGOR

அதிகமானவர்கள் கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டால் தொற்று நோயை கட்டுப்படுத்தலாம்- மந்திரி பெசார்

ஷா ஆலம், மே 11:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிடி) கீழ் உள்ள பகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை மூலம் அதிகமான நபர்களைக் கண்டறிய முடிந்தால், கோவிட் -19 மாநிலத்தில் பரவுவதை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  நம்புகிறார். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜாலான் ஓத்மான் சந்தையைச் சுற்றி தொற்று நோய் பரவுவதை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் சிலாங்கூரில் கோவிட்-19 இன் புதிய சம்பவங்கள் அதிகரிக்கும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி எதிர்பார்க்கிறார்.

“அதிர்ஷ்டவசமாக, இன்று புதிய சம்பவங்கள்  குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது , ஆனால் ஓத்மான் பிஜே சாலை சந்தையைச் சுற்றி பரிசோதனை செய்து வருவதால், வரும் நாட்களில் கோவிட்-19 சம்பவங்கள்  சற்று  அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தொற்று நோய் அதிகமான மக்களிடம்  கண்டுபிடிக்கப்பட்டால் மிகவும் நல்லது. இதன் மூலம் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி கிடைக்கும். சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுங்கள்,” என்று அவர் டிவிட்டரில் எழுதினார்.

இன்று நண்பகல் நிலவரப்படி, சிலாங்கூர் நேற்றுடன் ஒப்பிடும்போது மூன்று புதிய கோவிட் -19 வழக்குகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது வரையில்மொத்தம் 1,607 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று, சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், ஒத்மான் சாலை சந்தையில் வசிப்பவர்கள் மீது சுகாதார அமைச்சு கோவிட் -19 சோதனை நடத்தும் என்றார். கோவிட்-19 நோய் புதிய சம்பவங்கள்  26 பதிவு செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய பின்னர், மே 23 வரை இந்த பகுதி பிகேபிடி நடவடிக்கையை எதிர் கொள்ள நேரிட்டது.


Pengarang :