Peniaga Restoran Al Falah Noori dibuka seperti biasa dengan kehadiran pelanggan yang berkurangan di Seksyen 20 Shah Alam pada 18 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: உணவகங்களில் சாப்பிடலாம் ஆனால் சமூக இடைவெளியை அமல்படுத்துங்கள் !!!

ஷா ஆலாம், மே 12:

சமூக இடைவெளியைகடை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சிலாங்கூரில் உள்ள அனைத்து உணவகங்களும் இப்போது காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கு உணவு அருந்துவது உட்பட முழுமையாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 2020 ஜூன் 9 ஆம் தேதி வரை நிபந்தனைைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை  (பிகேபிபி) நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை அனைத்து மேயர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தெரிவித்தார்.

இருப்பினும், கடையில் நெரிசலைத் தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்ய உணவக உரிமையாளர்கள் ஊக்குவிக்கப்படுவதாக அவர் கூறினார். ” அங்காடி  விற்பனையாளர்கள் மற்றும் சாலையோர விற்பனையாளர்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படத் தொடங்கலாம், ஆனால் நடைபாதைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் மேசைகள் திறக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

” சீரான செயலாக்கநடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணக்கமான நிலை இருப்பதை உறுதி செய்வதற்காக ஊராட்சி மன்ற அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வார்கள்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தை நடவடிக்கைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், காலை மற்றும் இரவு சந்தை நடவடிக்கைகளுக்கு தடை நிரந்தரமானது என்றும் அவர் கூறினார்,”  என்று அவர் கூறினார்.


Pengarang :