Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari Balai Penghulu Mukim Batu, Gombak pada 1 Mei 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: கோவிட்-19 தொற்று நோய் எதிர்ப்பு போராட்டம் இன்னும் முடியவில்லை !!!

ஷா ஆலம், மே 12:

பல பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்து போராடுமாறு ஒட்டுமொத்த சமூகத்தையும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் கேட்டுக்கொள்கிறார். “நாடு முழுவதும் 94.4 % பிரிவுகள், மண்டலங்கள், துணை மண்டலங்கள் மற்றும் வளாகங்கள் இப்போது பச்சை  மண்டலங்களாக வகைப்படுத்தப் பட்டிருந்தாலும், கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகள் இன்னும் தொடரப்பட வேண்டும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷார  இன்று இரவு ட்விட்டரில் தெரிவித்தார்.

சிலாங்கூரில் இன்று மூன்று புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, மொத்தம் 1,610சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோம்பக் மாவட்டம் இன்று மஞ்சள் மண்டலமாக மேம்பட்டது, இதனால் சிலாங்கூரில் அனைத்து மண்டலங்களும்  சிவப்பு மண்டலத்திலிருந்து வெளியே வந்து விட்டது. நாட்டில் இன்று 16 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது நடமாடும்  கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டதிலிருந்து மிகக் குறைவானது. இவற்றில், ஒன்பது வழக்குகள் வெளிநாட்டினருடன் தொடர்புடையவை.


Pengarang :