SELANGOR

பெட்டாலிங் ஜெயாவில் காவல்துறை பிகேபிபி நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது !!!

பெட்டாலிங் ஜெயா, மே 17:

மே 4 முதல் நிபந்தனைக்குட்பட்டநடமாடும் கட்டுப்பாட்டு ஆணைக்கு (பிகேபிபி) மக்கள் தொடர்ந்து கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்காக நகரத்தை சுற்றி போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகம் (ஐபிடி) ஒரு அறிக்கையில், ‘அபெர்டீன்’ போலீஸ் ரோந்து (எம்பிவி) ரோந்து முறை மூலம் மலேசிய ஆயுதப்படைகளுடன் (ஏடிஎம்) இணைந்து ‘ஓப்ஸ் அமாரான் & சாப்பு’ மூலம் இந்த பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

” செம்பாகா பொதுச் சந்தை மற்றும் எஸ்எஸ் 24 தாமான் மெகா சந்தையைச் சுற்றி நடவடிக்கைகளை மேற்கொண்டது.1988 ஆம் ஆண்டு தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர் பிகேபிபிக்கு இணங்காதவருக்கும் அறிவிப்பு மற்றும் வலுவான அறிவுறுத்தல்களை வழங்கியது.”

“பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம்  (எம்பிபிஜே) ஒவ்வொரு வணிக உரிமத்தின் செல்லுபடியை சரிபார்க்க உதவுகிறது” என்று முகநூலில் வழியாக கூறியுள்ளது. அதே அறிக்கையில் லெம்பா சுபாங்  மக்கள் வீடமைப்பு திட்டத்தில் (பிபிஆர்) சாலை பயனர்கள் மீது காவல்துறையினர் ஒரு விரைவான சோதனை நடத்தியுள்ளனர். எனவே, தொடர்ந்து ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும், நல்ல காரணமின்றி வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது,” என்று தமது அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.ந


Pengarang :