NATIONAL

பிகேபி காலகட்டத்தில் ஆலயங்களுக்கான நெறிமுறைகளை பரிசீலனை செய்து வருகிறது- இந்து சங்கம்

கோலா லம்பூர், மே 18:

ஆலயங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளைத் தேசிய பாதுகாப்பு மன்றம் பரிசீலித்து நாளை முடிவை அறிவிக்கும் என்று இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் தெரிவித்தார்.கட்டுப்படுத்தப்பட்ட நடமாட்ட தடையுத்தரவு காலத்தில், இந்து ஆலயங்களில் வழிபாடு நடத்த வழக்க நெறிமுறைக்கான வரைவு ஒன்று ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தங்களது பரிந்துரையில், சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளித்தல், முகக் கவசம் அணிதல், மற்றவர்களைத் தொடாது பார்த்துக் கொள்ளல், ஆலயத்தினுள் செல்வதற்கு முன்னர் கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ளல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், ஆலயத்தினுள் பெரும் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் கூடியபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தியானம் செய்ய 10 நிமிடம் தரப்படும். உணவுகளை ஆலயத்திலேயே உண்ணுவதைத் தவிர்த்து அவற்றைப் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வோர் ஆலயமும் கட்டுப்பாடுகளை அனுசரிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கட்டுப்பாடுகள் சுகாதார அமைச்சின் ஆலோசனை யின் பேரில் வரையப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆலயத்திலும் உள்ளே செல்லவும் வெளியே வரவும் தனித்தனி வாயில்கள் ஏற்பாடு செய்யப்படும். திருமணங்களின்போது, மணமக்கள் பெற்றோரின் காலைத் தொட்டு வணங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், அப்பிரச்சினை இன்னும் முடிவாகவில்லை.


Pengarang :