PBTSELANGOR

காஜாங் பொதுச் சந்தையின் 216 வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கோவிட்-19 பரிசோதனை- எம்பிகெஜே

ஷா ஆலம், மே 21:

காஜாங் பொதுச் சந்தையில் 216 வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கோவிட் -19 பரவுவதைத் தடுக்க காஜாங் நகராண்மைக் கழகம் (எம்பிகேஜே) இந்த தொற்று நோய் சமூக பரிசோதனை நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதன் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். மே 18 அன்று எம்பிகேஜே  சவுஜானா இம்பியன் செரி செம்பகா மண்டபத்தில் உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலக ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது என்று கமருல் இஸ்லான் சுலைமான் தெரிவித்தார்.

” அனைத்து வர்த்தகர்களும் தொழிலாளர்களும் மீண்டும் வேலை செய்யவோ அல்லது வர்த்தகம் செய்யவோ அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.கோவிட்-19 பரிசோதனை குறித்து எங்களுக்கு இன்னும் முறையான முடிவு கிடைக்கவில்லை. சுகாதார அமைச்சின் தகவலுக்காக காத்திருக்கிறோம்” என்று நேற்று இரவு சிலாங்கூர் இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார். கிருமி நாசினி தெளிக்கப்படவும் மற்றும் சுத்தம் செய்யும்  நோக்கங்களுக்காக சந்தை நேற்று மூடப்பட்டதாகவும், பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

” இந்த வார இறுதியில் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுவது என்பது எங்களுக்குத் தெரிந்தாலும், மக்களின் பாதுகாப்புக்கு  முன்னுரிமை அளிக்கப்படும்,” என்று அவர் கூறினார். முன்னதாக, கோலாலம்பூர் மொத்த சந்தையில் இதே போன்ற கிளஸ்டர் தொடர்பாக நான்கு பொதுச் சந்தைகள் மூடப்பட்டன.


Pengarang :