KUALA LUMPUR, 21 Mei — Penduduk Mohd Fitri Mokhtar menyalakan satu daripada 200 pelita bagi menghasilkan frasa ‘Raya KL Je’ ketika tinjauan fotoBernama di Kuarters Jabatan Kerja Raya (JKR) Sungai Besi hari ini. Menurut Pengerusi Persatuan Penduduk Kuarters JKR Sungai Besi Abd Wahab Ismail, idea tersebut muncul selepas Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin dalam satu pengumuman khas mengumumkan orang ramai tidak dibenarkan membuat pergerakan merentas negeri untuk tujuan pulang ke kampung bagi menyambut Hari Raya Aidilfitri sebagai langkah membendung penularan wabak Covid-19. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

பிகேபிபி: நோன்பு பெருநாள் காலத்தில் வீடுகளுக்கு செல்ல அனுமதி அளித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கோலா லம்பூர், மே 21:

எதிர் வரும் நோன்பு பெருநாள் காலத்தில் வீடுகளுக்கு செல்லும் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர்துறை அமைச்சர் (இஸ்லாமிய விவகாரம்) டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்லி முகமட் அல்-பக்ரி தெரிவித்தார். நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) காலகட்டத்தில் நோன்பு பெருநாளை கொண்டாடும் மக்கள் வீடுகளுக்கு வருகை புரிய அரசாங்கம் அனுமதி அளித்தாலும் மிகவும் எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும் என்று நினைவு படுத்தினார் அவர்.

” எடுத்து காட்டாக, நோன்பு பெருநாள் அன்று கல்லறைகளுக்கு செல்பவர்கள் சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். சமூக இடைவெளி மற்றும் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். அமைச்சர் இஸ்மாயில் சப்ரி இதனை விரிவாக விளக்கம் தந்துள்ளார். இதற்கு அனுமதி அளித்தாலும், இதனை செயல்படுத்த ஊக்குவிக்கப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

” இருந்தாலும், இந்த வழிமுறைகள் மாநில அரசாங்கங்கள் வெளியாக்க வேண்டும். சில மாநிலங்கள் இதற்கு தடை விதித்துள்ளன. இதன் உள்நோக்கம், கோவிட்-19 தொற்று நோய் பரவாமல் இருக்கவே ஆகும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் பேசினார்.


Pengarang :