SHAH ALAM, 25 Mei — Anggota Polis dari Ibu Pejabat Polis Daerah Shah Alam mengarahkan pengunjung yang hadir untuk mengamalkan penjarakan sosial semasa rondaan di sebuah pasaraya di Seksyen 14 Shah Alam hari ini. Orang ramai yang berkunjung ke pasaraya dinasihatkan agar mematuhi Prosedur Operasi Standard (SOP) Perintah Kawalan Pergerakan Bersyarat (PKPB) yang telah ditetapkan bagi mengekang penularan wabak COVID-19. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

மீட்பு நிலை பிகேபி பொது இடங்கள் மற்றும் பேரங்காடிகளில் எஸ்ஓபிகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் !!!

ஷா ஆலம், ஜூன் 9:

மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (சிபிபிபி) புதிய திட்டம் நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை பொது வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவது குறித்து கவனம் செலுத்தும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) தெரிவித்தார். எல்லை தாண்டிய நடமாட்டத்தை  தடுக்க நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாட்டு ஆணையின் (பிகேபிபி) போது செய்யப்பட்ட சாலைத் தடைகள் இனி செயல்படுத்தப்படாது என்று டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். இருப்பினும், பிற குற்றங்களைை கண்காணிக்க சாலைத் தடுப்பு சோதனைகளை மேற்கொண்டு  வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” இன்று மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்  தடைகளின் கடைசி நாள், ஏனென்றால் நாளை முதல் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நடவடிக்கை தொடங்குகிறது. இருப்பினும், ‘ஓப்ஸ் பெந்தேங்’  போன்ற குற்றங்களின் கண்காணிப்பு வழக்கம் போல் தொடரும்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் ஒரு ஊடக மாநாட்டில் கூறினார். ஞாயிற்றுக்கிழமை, பிகேபிபி பதிலாக புதிய நடைைமுறைகள் மாற்றப்படும் என்று பிரதமர் அறிவித்தார், இது எல்லை தாண்டிய நடமாட்டத்திற்கு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :