Anggota PDRM dan ATM mengawal jalan keluar masuk di pos kawalan berikutan Perintah Kawalan Pergerakan Pentadbiran dilaksanakan di Pangsapuri Utama Taman Langat Murni, Kuala Langat pada 7 Jun 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

பிகேபி நிர்வாகத்தில் இருந்த இரண்டு வீடமைப்பு பகுதிகள், திறந்து விடப்பட்டது !!!

கோலா லங்காட், ஜூன் 16:

தாமான் லங்காட் மூர்னி மற்றும் தாமான் லங்காட் உத்தாமா வீடமைப்பு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) நிர்வாகம் இன்றோடு முடிவடைந்தது என்று கோலா லங்காட் நில மற்றும் மாவட்ட அதிகாரி முகமட் ஜூஸ்னி ஹாசிம் தெரிவித்தார். இன்று காலை 11 மணி அளவில் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மலேசிய சுகாதார அமைச்சு, இந்த இரு வீடமைப்பு பகுதிகளில் 4,697 குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய் பரிசோதனை மேற்கொண்டதாக இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார். அவரோடு கோலா லங்காட் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடேணன்ட் அஸிஸான் துக்கிமானும் உடன் இருந்தார்.


Pengarang :