RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: ‘சிலாங்கூர்கூ’ வீடமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலகட்டத்தில் கட்டப்படும் !!!

ஷா ஆலம், ஜூன் 16:

கோவிட்-19 தொற்று நோயை தடுக்க அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையினால் நிறுத்தப்பட்ட ‘சிலாங்கூர்கூ’ வீடமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலகட்டத்தில் கட்டப்படும் என சிலாங்கூர் மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். 30,000 கட்டுப்படி விலை வீடுகளை கட்டும் இலக்கு தொடரும் எனவும் 2023-க்குள் இது முடிவடையும் என எதிர் பார்க்கப்படுவதாக அவர் சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

கடந்த ஜனவரி 2014 தொடங்கி செப்டம்பர் 2019 வரை 274 ‘சிலாங்கூர்கூ’ வீடமைப்பு திட்டங்கள் அனுமதி வழங்கப்பட்டது என்றார். மொத்தம் 121,676 வீடுகள் இந்த திட்டங்களில் அடங்கும்.


Pengarang :