Tinjauan SelangorKini di Pasar Pagi MPSJ Bandar Puchong Jaya yang kembali dibuka pada 16 Jun 2020 dengan pematuhan SOP ketat. Foto FIKRI YUSOF/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர்: சிலாங்கூரின் சந்தைகளில் எஸ்ஓபிகள் தொடரும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்

அம்பாங், ஜூன் 19:

தற்போது நடைபெற்று வரும் காலை, இரவு மற்றும் பஜாரியா சந்தைகளின் சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மாற்ற சிலாங்கூர் முன்மொழியவில்லை. ஊராட்சி மன்றங்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் (எம்கேஎன்) தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் அனைவருக்கும் திருப்திகரமானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் உள்ளது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற ஆட்சிக்குழு உறுப்பினர் எங் ஸீ ஹான் கூறினார்.

” பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால் சிலாங்கூர் மாநிலத்தில்  எப்போதும் எஸ்ஓபியை பின்பற்றி நடக்க வேண்டும. எல்லோரும் இந்த புதிய மாற்றங்களை கடைபிடிக்க வேண்டும். சந்தையில் இருந்து புதிய கிளஸ்டர்கள் வெளிவருவதை நாங்கள் விரும்பவில்லை” என்று இன்று காலை சந்தையைப் பார்த்தபின் சந்தித்தபோது அவர் கூறினார்.

கடந்த செவ்வாயன்று, 500 வணிகர்கள் மற்றும் இரவு சந்தை வர்த்தகர்கள் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நடந்து வரும் வணிக நடவடிக்கையை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. கடுமையான  எஸ்ஓபியைத் தொடர்ந்து வணிகத்தை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பத்தை இவர்கள் ஒத்திவைத்தனர். இந்த விவகாரம் தற்போது கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வர்த்தக நடவடிக்கைகளையும், கோவிட் -19 பரவுவதைத் தடுக்க ஊராட்சி மன்ற  அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஸீ ஹான் கேட்டுக்கொண்டார்.

“இந்த நேரத்தில் புதிய விதிமுறைகளை சரிசெய்ய நேரம் தேவைப்படுகிறது, ஆனால் இது ‘நாமே நம்மை கவனிப்பதற்காக’  புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக சிறந்த படியாகும்” என்று அவர் மேலும் கூறினார். திங்கள்கிழமை தொடங்கி, மொத்தம் 417 காலை சந்தைகள், இரவு சந்தைகள் மற்றும் பஜாரியா ஆகியவை மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கட்டங்களாக திறக்கப்பட்டன.


Pengarang :