PUTRAJAYA, 24 Jun — Alesha Abdullah Sani mengaminkan doa sebelum makan tengah hari di dalam kelas di Sekolah Menengah Kebangsaan Putrajaya Presint 11 (1) dalam suasana pematuhan Garis Panduan Pengurusan Pembukaan Semula Sekolah hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALPENDIDIKANRENCANA PILIHAN

பள்ளிகளில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் ஏற்பட்டால், மூடும்படி கட்டளை- சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, ஜூன் 24:

பள்ளிகளில் கொவிட்-19 தொற்று நோய் கண்டறியப்பட்டால், அவற்றை மீண்டும் மூடுவதற்கான உத்தரவை சுகாதார அமைச்சு வெளியிடும்.

சம்பந்தப்பட்ட பள்ளியில், நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரப் பரிசோதனை மேற்கொள்வது, அடிப்படையான ஒன்று என்றும் சுகாதார துணை அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறியிருக்கிறார்.

பிகேபிபி காலக் கட்டத்தில், நிர்ணயிக்கப்பட்டிருக்கும் எஸ்.ஓ.பிகளை பள்ளிகள் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிச் செய்ய, கல்வி அமைச்சுடன் இணைந்து சுகாதார அமைச்சு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் டாக்டர் நோர் அஸ்மி குறிப்பிட்டார்.

அதோடு, பள்ளி சிற்றுண்டிகளில் நெரிசலைத் தவிர்ப்பதற்கு, ஆசிரியர்கள் உணவு பொட்டலங்களை முன்கூட்டியே முன் பதிவு செய்து மாணவர்களுக்கு வகுப்பறையில் வழங்கி வரும் கூடுதல் எஸ்ஓபிக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

புதன்கிழமை, புத்ராஜாயா பெர்சின் 11(1) இடைநிலைப்பள்ளியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் நோர் அஸ்மி இதனைக் கூறினார்.

-பெர்னாமா


Pengarang :