Dato’ Seri Amirudin Shari menunjukkan isyarat bagus selepas memeriksa kualiti beg yang dibekalkan kepada penghantar barang pada sidang media pelancaran portal Seldec dan aplikasi Seldec Rider di Bangunan SUK, Shah Alam pada 24 Jun 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

2025-க்குள் செல்டேக் 7,800 வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு- மந்திரி பெசார்

ரந்தாயான் இ-பெகாலான் டிஜிட்டல் சிலாங்கூர் (செல்டேக்) எதிர் வரும் 2025 ஆண்டுக்குள் 7,800 வேலை வாய்ப்புகளை பல்வேறு துறைகளில் உருவாக்க இலக்கு கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இணையத்தில் வியாபாரச் சந்தைகளை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட செல்டேக்-இல் தற்போது 395 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர். பல வேலையிழந்துள்ள இளையோரிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது என அவர் மேலும் கூறினார்.

” புறநகர் தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. தொழில் முனைவர்களுக்கு டிஜிட்டல் விளம்பர உலகம் சம்பந்தமாக பயிற்சிகள் வழங்கப்படும்,” என்று சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற செல்டேக் இணையத்தை திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார்.


Pengarang :