FILE PHOTO: A nurse wearing a protective suit works inside the coronavirus disease (COVID-19) ward at Kuala Lumpur Hospital, in Kuala Lumpur, Malaysia April 21, 2020. REUTERS/Lim Huey Teng
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: 18 புதிய சம்பவங்கள், 195 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

புத்ராஜெயா, ஜூன் 28:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,634 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 121-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 2 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் யாரும் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெறவில்லை. மேலும், இன்று 10 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,318 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 96.3 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :