Sky Mirror di Kuala Selangor antara tarikan pelancong tempatan dan luar negara. Foto arkib SELANGORKINI
NATIONALRENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: உள்நாட்டு சுற்றுலா நடவடிக்கையை சிலாங்கூர் அரசாங்கம் மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்ளும் !!!

பத்து கேவ்ஸ், ஜூன் 28:

கோவிட் -19 தொற்று நோயைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக உள்நாட்டு சுற்றுலாவை மீட்டெடுப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. மே 4 ஆம் தேதி இந்தத் துறை திறக்கப்பட்ட போதிலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

” சுற்றுலாப் பயணிகள் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள். இதில் இருந்து மீட்சி பெற ஆறு முதல் ஒரு வருடம் வரை ஆகலாம். எனவே நாம் உள்நாட்டு சுற்றுலா மீது கவனம் செலுத்துகிறோம், இதனால் இந்தத் துறையில் முழுமையாக மேம்பாடு அடைய முடியும்,” என்று நேற்று ஸ்ரீ தெமெங்கோங் அடுக்குமாடி சான்றிதழை ஒப்படைத்த பின்னர் அவர் கூறினார். அண்மையில் நடந்த சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கைக் கூட்டத்தில் சுற்றுலா சிலாங்கூரில் இந்த திட்டம் தாக்கல் செய்யப்பட்டது, இது பெரிய அளவிலான திட்டங்களின் கட்டுப்பாட்டை வலியுறுத்தியது. “மாநாடு, கல்வி மற்றும் இசை நிகழ்ச்சிகள் மூலம் சிலாங்கூர் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெற்றுள்ளது. இருப்பினும், இப்போது நாம் ஒரு சிறிய (வருகையாளர்கள்) அளவிலான எண்ணிக்கையில் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :