NATIONAL

மதுபானங்களை மளிகைக் கடைகளில் விற்பனை செய்யும் தடையை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது- வீடமைப்புத்துறை அமைச்சு

நாடாளுமன்றம், ஜூலை 23:

மதுபானங்கள் எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துவதால், அவற்றை மளிகைக் கடைகளில் விற்பனை செய்வது குறித்து மீண்டும் பரிசீலிப்பதற்கான அவசியம் இருக்கிறது. மதுபானம் குறித்து எதிர்மறையான விளைவுகளை கையாள்வதற்கும், அதனை கட்டுப்பாட்டுடன் விற்பனை செய்வதற்கும் சிறப்பு கடையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சு கருதுவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் இஸ்மாயில் அப்துல் முத்தாலிப் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் கொள்கைக்கு ஆதரவு வழங்கி அமைச்சு ஜூன் 9-ஆம் தேதி அனைத்து மாநில அரசாங்கங்களும் சிறப்பு மதுபான விற்பனை கடைகளை திறக்கவும் மதுபானம் குறித்து எதிர்மறையான விளைவுகளை கையாள்வதற்கு அதனை கட்டுப்பாட்டுடன் விற்பனை செய்வதற்கும் கடிதம் ஒன்றை வெளியிட்டது. இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மக்களவை கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரம் குறித்து செபங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அசிஸ் ஜம்மான் எழுப்பிய கேள்விக்கு, டாக்டர் இஸ்மாயில் இவ்வாறு பதிலளித்தார்.


Pengarang :