NATIONAL

பிரதமரின் குரல் பதிவு என சந்தேகிக்கப்படும் விசாரணை அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது !!!

கோலாலம்பூர், 23 ஜூலை:

பிரதமர், டான் ஶ்ரீ முஹீடின் யாசினின் குரல் பதிவு தொடர்பான விசாரணை அறிக்கையை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்), அட்டர்னி ஜெனரலிடம் ஒப்படைத்து விட்டது. அவ்விவகாரம் தொடர்பான விசாரணை முடிவடைந்து விட்டதாக, எஸ்பிஆர்எம். தலைமை ஆணையர், டத்தோ ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்திருக்கிறார்.

” குரல் பதிவின் நம்பகத்தன்மையில் முதலாவதாக கவனம் செலுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவதாக, அப்பதிவில் கூறப்பட்டிருப்பது ஒரு குற்றமா அல்லது இல்லையா என்று கண்டறியப்பட்டது,” என்று இன்று நடைபெற்ற ‘ஊழல் மற்றும் நேர்மை’ எனும் புத்தக வெளியீட்டிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம், டான் ஶ்ரீ முஹீடின் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக பேசிய குரல் பதிவு அதுவென்று, முன்னதாக தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சில அரசியல்வாதிகளை சம்பந்தப்பட்ட சில கட்சிகளில் இணைப்பது தொடர்பில் அந்த பதிவில் பேசப்பட்டிருந்தாக நம்பப்படுகிறது.

— பெர்னாமா


Pengarang :