PUTRAJAYA, 21 Julai — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah pada sidang media situasi semasa mengenai jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. — fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

சுகாதார அமைச்சு: 23 கோவிட்-19 புதிய சம்பவங்கள், 17 உள்நாட்டு சம்பவங்கள்

புத்ராஜெயா, ஜூலை 25:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 23 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 17 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இதுவரையிலான மரண எண்ணிக்கை 123-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 3 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அதில் இருவர் சுவாசிக்க கருவி உதவியை பெறுகிறார்கள். மேலும், இன்று 17 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,594 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 97 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :