SELANGOR

திறன்மிக்கத் தொழிலாளர்களே தொழில் துறைக்கு தேவை

ஷா ஆலம், செப் 8- தொழில் துறையின் நடப்பு தேவையை பூர்த்தி செய்வதில் தொழில் திறனும் அறிவாற்றல்மிக்க மனித வளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

மாநிலத்தை வளப்படுத்தும் திட்டத்திற்கேற்ப திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கும் திட்டம் நிபுணர்கள் மற்றும் தொழில் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது ஒரு கடுமையான பணி எனக் கூறிய அவர், உதாரணத்திற்கு உயர்கல்விக்கூடத்தில் படித்த பொறியாளர் தொழில் துறையின் தேவைக்கு பொருத்தமானவராக இல்லை என்றார். தனியார் உயர்கல்விக்கூடங்களில் இணைய பாதுகாப்பு மற்றும் தரவை மையமாக கொண்ட இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.

இருந்த போதிலும் அவர்கள் வேலை சந்தையில் நுழைவதற்குரிய ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். இங்குள்ள செத்தியா சிட்டி மாநாட்டுக்கு மையத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டம் மீதான கலந்துரையாடலில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பட்டதாரிகள் வேலை சந்தையின் தேவைக்கு ஏற்ற ஆற்றலை கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு பயிற்சிகளை அறிமுகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :