NATIONALSELANGOR

நீர் மாசுபடுதலைத் தடுக்க மத்திய அரசு முதல் அனைத்து ஏஜென்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம்

ஒரு மாநில அரசாக நதி நீர் மாசுபடுதலைத் தடுக்கச் சிலாங்கூர் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் சொற்பமே,  அதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பித்துக்கொள்கின்றனர். 1999ம் ஆண்டு நீர் சேவை சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்திலும் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் இருப்பதால், நீர் மாசுபடுதலைத் தடுக்கும் செயலை ஆக்ககரமாகச் செயல் படுத்த மத்திய அரசு முதல் அனைத்து ஏஜென்சிகளின் ஒத்துழைப்பும் மாநிலத்துக்கு மிக அவசியம் என்றார் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலத்தில் நதிகள் மாசுபடுவதைத் தடுக்க மாநிலச் சட்ட ஆலோசகர் டத்தோ சலீம் சைப், மாநில நீர்விநியோக நிறுவனத்தின் இயக்குனர் எஞ்சினியர் அஹிம் ஒஸ்மான், சுற்றுச்சூழல் இலாக்காவின் இயக்குனர் நோர் அசியா ஜபார் ஆகியோருடன் மந்திரி புசார் சந்திப்பு நடத்தியபின் நதி நீர் மாசுபடுத்துதல் மீது அவசரமாகக் கடும் நடவடிக்கை தேவைப்படுவது குறித்துக் குறிப்பிட்ட அவர்.

மாநிலத்தில் நதி நீர் மாசு படுத்தல் தொடர்பாக எல்லாத் தகவல்களையும் உள்ளடக்கிய துல்லியமான அறிக்கையைச் சட்டத்துறை இலாக்காவுக்கு மாநில அரசு வழங்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.

நதிகள் மாசுபடுவதைத் தடுக்க, குற்றம் இழைப்பவர்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கச் சட்டங்களைக் கடுமையாக்கப்பட வேண்டியது குறித்து மாநில மத்திய அரசுகள் விவாதிக்க வேண்டும் என்று நேற்று மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி விடுத்திருந்த கோரிக்கைக்குச் சட்டத்துறை தலைவர் அலுவலகம் அளித்துள்ள உடனடியான பதிலுக்குத் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்
கூறினார்


Pengarang :